சினிமா செய்திகள்

விருதுகளால் கிடைத்த கவுரவம்!

19 May 2017

அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, சினிமா வட்டாரத்தை மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்தையும் பரபரக்க வைத்துள்ள ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் அடுத்த படத்தில் நடிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதில், ரஜினிக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை வித்யா பாலனை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில், கை விரித்து விட்டாராம் வித்யா. இதையடுத்து, டில்லி அழகி, ஹூமா குரோஷியை, ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், கேங்ஸ் ஆப் வாசிபுர், ஜாலி எல்எல்பி ஆகிய படங்களில் நடித்தவர். குறைந்த படங்களிலேயே

நடித்திருந்தாலும், நடிப்புக்காக, மூன்று பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார். இதன்காரணமாகவே, ரஜினி ஜோடியாக, இவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha