உலகம் செய்திகள்

வெனிசுலா போராட்டத்தில் இருவர் சுட்டுக் கொலை!

20 Apr 2017

வெனிசுலா நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிபர் நிக்கோலஸ் மதுராவுக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த பரல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் "mother of all marches" என்று அழைக்கப்படுகிறது. இதுவரை நடந்த தொடர் போராட்டங்களில் 7 பேர் இறந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் 17 வயதாகும் சிறுவர் எனவும் ஒரு பெண் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது பதவியில் இருக்கும் அதிபர் நிக்கோலஸ் மதுராவை பதவி விலகக் கோரியும் புதிதாக அதிபர் தேர்தல் நடத்திடக் கோரியும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டம் குறித்து அதிபர் நிக்கோலஸ் மதுரா, 'எதிர்க்கட்சியை சேர்ந்வர்கள் தொடர்ச்சியாக போலீஸை தாக்கியும் கடைகளை கொள்ளையடித்தும் வருகின்றனர். இதைப் போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்ட 30 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெனிசுலா அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் தற்போது நடக்கும் போராட்டங்களுக்கு எதிராக பேரணி நடத்த உள்ளனர்.' என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha