கனடா செய்திகள்

ஹமில்ட்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் 10 வயதுச் சிறுமி பலி

17 May 2017

நேற்று ஹமில்ட்டனில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 10 வயதுச் சிறுமி பலியானார்.  நேற்று மாலை 6.30 அளவில் வீதியில் உலாவிக்கொண்டிருந்த குறித்த 10 வயது சிறுமியை வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை 5 மற்றும் Evans வீதிப் பகுதியில், City View Parkஇல்  இந்த விபத்து சம்பவித்த நிலையில், காவல்த்துறையினருக்கு தகவல் கிடைத்து அவர்கள் அங்கு சென்றதாகவும், அப்போது விபத்தில் சிக்கிய அந்த 10 வயதுச் சிறுமி  சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாகவே அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போதிலும், சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த சிறுமி அந்த பகுதியிலேயே வசித்து வருபவர் என்றும், வீதியில் உலாவிக் கொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளானார் என்றும் கூறப்படுகிறது.

.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha