இந்தியா செய்திகள்

ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் கட்டாயமல்ல

21 Apr 2017

ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவது கட்டாயமல்ல என்று உணவு மற்றும் நுகர்வோர் விவகார மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சேவைக்கட்டணம் என்பது வாடிக்கையாளர்களி விருப்பமே. எனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது, இதன் படி சேவைக்கட்டணம் என்பது கட்டாயமல்ல” என்று ராம்விலாஸ் பாஸ்வான் ட்வீட் செய்துள்ளார்.

இந்த வழிகாட்டுதல்களின் படி பில்களில் சேவைக்கட்டணம் என்ற பகுதி வெறுமையாகவே இருக்க வேண்டும், விருப்பப்பட்ட வாடிக்கையாளர்கள் அதில் கட்டணத்தை பூர்த்தி செய்யலாம்.

“கட்டாயமாக சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யலாம்” என்று நுகர்வோர் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

“சேவைக் கட்டணம் இல்லை. அது தவறாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து அறிவிக்கை ஒன்றை தயாரித்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்று பாஸ்வான் கடந்த வாரம் தெரிவித்திருந்தார், தற்போது இதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

பல ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் சேவைக்கட்டணம் என்று 5% முதல் 20% வரை வசூலிக்கப்படுவதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்ததையடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha