இந்தியா செய்திகள்

’’கர்நாடக அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது!’’ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

19 May 2017

பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், ‘’அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை கர்நாடக அரசு பழிவாங்குகிறது’’ என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

இன்று(19/05/2017) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழகத்தின் விவசாயத்தை பாதுகாக்க கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடகாவில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கிறது.

மேலும், தமிழகத்தில் காங்கிரசும், திமுகவும் ஒன்றாக செயல்படுகின்றன. இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு பழிவாங்குகிறது. இதற்காக மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவுகிறது. இதை தவிர்க்க மாநில அரசு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வரும் காலங்களில் தமிழக அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha