இந்தியா செய்திகள்

’’தூர்வாரப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!’’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி

19 May 2017

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருடந்தோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை வெப்பத்தைத் தவிர்க்கும் வகையில், ஊட்டிக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அதையொட்டி, மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளாகத் தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி மற்றும் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கூடலூரில் வருவாய்த்துறை சார்பில் வாசனைத் திரவியக் கண்காட்சி உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கோடை விழா ஊட்டியில் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான 121ஆவது மலர் கண்காட்சி, ஊட்டித் தாவரவியல் பூங்காவில் இன்று மே 19ஆம் தேதி தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, மலர் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மே 18ஆம் தேதி ஊட்டிக்குச் செல்வதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், “மழையில்லாததால் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படும் மேட்டூர் அணையில் அடுத்த வாரம் முதல் தூர்வாரும் பணி தொடங்கப்படும்.

தமிழகம் முழுவதும் தற்போது 1,519 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.300 கோடி செலவில் 2,200 ஏரிகளில் தூர்வாரப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha