சினிமா செய்திகள்

இரண்டு பாகங்களாக சங்கமித்ரா

17 May 2017

'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' முரளி ராமசாமி தயாரிப்பில் சுந்தர் சி.இயக்கத்தில் ஆர்யா, 'ஜெயம்' ரவி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 'சங்கமித்ரா'. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் 'சங்கமித்ரா' படத்தின் அறிமுகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்கவிருக்கிறது. இதற்காக இயக்குனர் சுந்தர்.சி., ஆர்யா, 'ஜெயம்' ரவி, ஸ்ருதிஹாசன், இந்த படத்தை தயாரிக்கும் 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' முரளி ராமசாமி ஆகியோருடன், 'சங்கமித்ரா' படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலானோர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பவர்களுக்காக 'சங்கமித்ரா' படம் பற்றிய அறிமுகம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் 'சங்கமித்ரா' படத்தின் கதை சுருக்கம் இடம்பெற்றுள்ளது. 8-ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்கமித்ரா ஒரு பேரழகி, அவளது ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவள் எதிர்கொள்ளும் சோதனைகளும், துயரங்களும் போராட்டங்களுமே கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகள் பற்றிய இந்த கதையை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது என்றும், இந்த படம் தொன்மையான தமிழ் மொழிக்கு எங்களது சமர்ப்பணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்களுடன் 'சங்கமித்ரா' இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha