சினிமா செய்திகள்

கமலின் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் சூர்யா

18 May 2017

இந்தியில் சல்மான்கான் நடத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்திய அளவில் மிக பிரலமான இந்த நிகழ்ச்சியை தற்போது தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் விஜய் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 15 பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வேண்டும். மொபைல், கடிகாரம், டிவி, நாளிதழ்கள் என எந்தவொரு விசயமும் அவர்கள் தங்கும் வீட்டில் இருக்காது.

முக்கியமாக, கேமரா மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களை கமல் மட்டும் சென்று சந்திப்பார். அவர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் போட்டி. இப்படியொரு தகவல் வெளியானதில் இருந்து அனைவருமே இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டரில், கமல் சார் நீங்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha