தொழில்நுட்பம் செய்திகள்

1980-களிலிருந்து கடல்களில் பிராண வாயு அளவு குறைந்து வருகிறது

05 May 2017

கடலில் கரைந்துள்ள பிராணவாயு அளவைக் கொண்டுதான் கடலின் ஆரோக்கியம் நிர்ணையிக்கப்படுகிறது, ஆனால் 1980-களிலிருந்தே கடல்களில் பிராணவாயு அளவு கடுமையாக குறைந்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 50 ஆண்டுகால கடல் தரவுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்து நீண்ட கால போக்குகள் மற்றும் மாதிரிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கடல் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியதால் 1980-களிலிருந்தே பிராணவாயு அளவு குறையத் தொடங்கியுள்ளது என்கிறது ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியான இந்த ஆய்வு.

“கடல்களில் உள்ள பிராணவாயுவில் இயக்க மூலக்கூறுகள் உள்ளன, அதன் திரட்சி இயற்கையாக பருவநிலை மாறும்போது மாறுகிறது. ஆனால் எங்கள் ஆய்வில் முக்கியமான தரவு என்னவெனில் இயற்கை மாற்றங்களுக்கு ஏற்ப கடல் பிராணவாயு அளவு குறைவதை விட மிக அதிகமான விகிதத்தில் குறைந்து வருகிறது என்பதே” என்று அட்லாண்டாவைச் சேர்ந்த ஜார்ஜியா தொழில்நுட்ப கழகத்தின் அசோசியேட் புரொபசர் டகா இடோ என்பவர் கூறுகிறார்.

கடல்நீர் பிராண வாயு அளவு குறைவதால் உலகம் முழுதும் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிர்கால ஆபத்து அதிகமாகியுள்ளன. அதுவும் சமீபத்தில் பிராணவாயு குறைவு நிகழ்வினால் நிறைய மீன்கள், நண்டுகள் இறந்து போவதும் இடம்பெயர்வதும் அதிகரித்து வருகின்றன.

குளிர்ந்த கடல் நீர் தக்க வைக்கும் பிராண வாயுவை விட வெப்பமாகும் கடல் நீர் குறைவாகவே பிராணவாயுவை தக்க வைக்கும்.

இதிலும் கூட 20 ஆண்டுகளாக கடல் நீர் வெப்பமடையும் விகிதத்திற்கு இணையாக இல்லாமல் மேலதிகமாக பிராண வாயு அளவு குறைந்து வருகிறது.

துருவங்களில் பனி உருகி வருவது மிக வேகமாக நடந்து வருவதால் கடல்களில் புதிய நீர் சேகர்மாகிறது, இதனால் கடல்நீர் அதிகமாக வெப்பமடைகிறது. இது பிராணவாயுவை அழித்து வருகிறது, என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha