வரலாறு செய்திகள்

6 மில்லியன் பவுண்டுக்கு மேல் ஏலம் போன திப்புசுல்தான் ஆயுதங்கள்

19 Aug 2016

திப்புசுல்தான் ஆயுதங்கள்
மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டன் போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் சுமார் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் ஏலம் போனது

திப்பு சுல்தான் பயன்படுத்திய இந்தி ஆயுதங்களில் புலி சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் பயன்படுத்திய , விலை உயர்ந்த மணிகள் பதித்த, புலித்தலையுடன் கூடிய வாள் 2.15 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. அதே போல, அவர் பயன்படுத்திய இரு-வேட்டு விளையாட்டுத் துப்பாக்கி 7.22 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

ஏலம் போன இந்த ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக்கவசங்கள், பிஸ்டல்கள், மூன்று பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி ஆகியவை அடங்கும். இவை அனைத்துமே கலை நயம் மிக்க வகையில் நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன.

இந்திய மற்றும் இஸ்லாமிய கலைப் பொருட்களின் ஏலம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக சுமார் 7.4 மில்லியன் பவுண்டுகளுக்கு பொருட்கள் ஏலம் போயின.

திப்பு சுல்தான் அப்போது இந்தியாவில் கால் ஊன்றிக்கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் கடுமையான எதிர்ப்பாளராக இருந்தவர். அவர் 1799ம் ஆண்டில் இறக்கும்வரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து சண்டையிட்டார்  எனபது குறிப்பிடதக்கது.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தானே. அவர்தான் குறைந்த அலவு தொலைவு  பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன்படுத்தினார்.
.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha