உலகம் செய்திகள்


இங்கிலாந்து ராணிக்கு 91வது பிறந்த நாள்

Apr 21, 2017


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இன்று 91வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இரண்டாம் எலிசபெத் 1926 ஏப்., 21ல் லண்டனில் பிறந்தார். இவர் 1952 பிப்., 6ல் ராணியாக பொறுப்பேற்றார். வைர விழா கடந்த இவர், 'இங்கிலாந்தின் நீண்டகால ராணி' (65 ஆண்டுகள்) என்ற பெருமை பெற்றவர். மேலும், உலகளவில் தற்போதைய மன்னர்களில், நீண்டகால மன்னராட்சிக்கு சொந்தக்காரரும் இவர்தான்.