இந்தியா செய்திகள்


பொதுமக்களின் வேதனைக்குரல்! முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.

Feb 17, 2017


தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பொதுமக்களும் தாங்கள் விரும்பாத ஆட்சிக்கு தங்களது தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணை போக வேண்டாம் என்று தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எந்தவித இடையூறும் கொடுக்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஓர் ஆட்சி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு துணைபோகும் தங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிப்பதற்காகவும், அமையான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் தங்களது கண்டனத்தை தமிழகம் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.

 

அவர்களையெல்லாம் காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துதற்கு வேறு வழி தெரியவில்லை. தயவு செய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல் துறையின் உடனே விடுவிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல் துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல் துறையினரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று .பி.எஸ். குறிப்பிட்டுள்ளார்.