வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையிலும், இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்துள்ளது.
இந்த அணியில் மைக்கேல் லூயிஸ் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார். அவர் கிரேக் பிராத்வைட் உடன் தொடக்க வீரராக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆடும் லெவன்:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.