விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், தி கோட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரசிகர்கள் இந்த படத்திற்கான டிக்கெட் எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தி கோட் படம் குறித்த புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய தேசிய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான சுப்ரமனியம் பத்ரிநாத்- தி கோட் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார்.
இதனை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், கோட் படத்தில் எனது பங்கை செய்துள்ளேன். முதல் முறையாக படத்தில் அங்கம் வகிக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது. ரிவ்யூ மற்றும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.