13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கோவா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோவா அணியில் போர்ஜா ஹெரேரா ‘ஹாட்ரிக்’ கோல் (13-வது, 20-வது மற்றும் 71-வது நிமிடம்) அடித்தார். ஈஸ்ட் பெங்கால் தரப்பில் மடி தலால் 29-வது நிமிடத்திலும், டேவிட் லால்லன்சங்கா 85-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.