தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிகாக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ ரெயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை: காலை மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரெயில் அனைத்து
முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்)
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் விம்கோ நகர பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்
31.10.2024 (வியாழக்கிழமை) மற்றும் 01.11.2024 (வெள்ளிக்கிழமை) மெட்ரோ ரெயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும்.
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
2 காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.