Friday, December 13, 2024
Google search engine
Homeஇந்தியாகேரளாவில் வயநாடு அருகே நிலத்தின் அடியில் பலமுறை சத்தம்: பொதுமக்கள் அச்சம்

கேரளாவில் வயநாடு அருகே நிலத்தின் அடியில் பலமுறை சத்தம்: பொதுமக்கள் அச்சம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர்-கேரள எல்லையில் உள்ள மலப்புரம் மாவட்டம் போத்துகல், ஆனக்கல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிலத்தின் அடியில் பலமுறை சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கேரள வருவாய்த்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். பொதுமக்கள் அச்சப்படும் வகையில் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments