இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கோட்சி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வெறும் 17.5 ஓவர்களிலேயே 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 25 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த போட்டியில் 10 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சாம்சன் சமன் செய்துள்ளார்.
அதன் விவரம்:-
இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சாம்சன் சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித் 10 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை சாம்சன் சமன் செய்துள்ளார்.