வட்டி வீதங்களை குறைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கி வட்டி வீதங்களை தற்போதைக்கு குறைக்கும் சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் துரித கதியில் தீர்மானங்கள் எடுக்கப் போவதில்லை என்றும், பணவீக்க நிலைமைகள் குறைவடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உலகப் பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமைகள் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகளில் தாக்கத்தை செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பொருளாதார நிலைமைகள் குறைந்து விட்டதாக கருத முடியாது என அவர் தெரிவித்தார்.
கனடாவில் பணவீக்கத்தை இரண்டு வீதமாக குறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கினை எட்டும் வரையில் வட்டி வீத குறைப்பிற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ரிப் மெக்கலம் மேலும் தெரிவித்தார்.