இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் (வயது 34) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் ஆன இவர் தலா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் கடைசியாக 2019-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளில் இடம்பிடித்து விளையாடியுள்ளார்.