Friday, December 13, 2024
Google search engine
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி தொடர்; பாகிஸ்தானில் நடைபெறுமா..? - ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை

சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பாகிஸ்தானில் நடைபெறுமா..? – ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.

ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது யோசனையை தெரிவிப்பார்கள்.

ஐ.சி.சி.யை பொறுத்தவரை இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் நடத்துவதற்கு சம்மதிக்கும்படி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. 10 ஆட்டங்களை பாகிஸ்தானிலும், 5 ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்ற பரிந்துரையை ஐ.சி.சி. முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீரும். ஆனால் அவர்கள் எதுக்கும் பிடிகொடுக்காவிட்டால், போட்டி முழுமையாக வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments