கனடிய இளைஞர்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும்போக்குவாத வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையம் ஊடான வெறுப்புணர்வு வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீவிரவாத சம்பவங்கள் தொடர்பில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும்டயூத இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாத காலப் பகுதியில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் ஐந்து கனடிய இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளம் தலைமுறையினா அடிப்படைவாத கோட்பாடுகள் குறித்து நாட்டம் காட்டுவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என யூத மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.