Friday, December 13, 2024
Google search engine
Homeசினிமாகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விளம்பரத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விளம்பரத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா

ரியல் எஸ்டேட் துறையில் புகழ் பெற்ற டி.ஆர்.ஏ. நிறுவனம் தனது விளம்பர தூதராக தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமனம் செய்துள்ளது. இவரை பிராண்ட் தூதராக நியமித்து இருப்பதன் மூலம் தங்களது புதிய தத்துவமான ‘பெருமைமிகு இல்லம்’ என்னும் தாரக மந்திரத்திற்கு ஏற்ப தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, டி.ஆர்.ஏ. நிறுவனம், ராஷ்மிகாவை வைத்து புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மக்கள் தங்கள் வீடுகள் மீது வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

தொலைக்காட்சி விளம்பரம் தவிர, பத்திரிக்கை, டிஜிட்டல் விளம்பரங்கள், மல்டிபிளக்ஸ் விளம்பரம் எனது அனைத்து தளங்களிலும் இந்த விளம்பரத்தை டி.ஆர்.ஏ. வெளியிடுகிறது.

ராஷ்மிகா மந்தனா, இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இணைந்திருப்பதன் மூலம், டி.ஆர்.ஏ. தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விளம்பரத்தை பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments