Thursday, January 16, 2025
Google search engine
Homeவிளையாட்டுபார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்கான காரணம் இதுதான் - ஏபி டி...

பார்டர் – கவாஸ்கர் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்கான காரணம் இதுதான் – ஏபி டி வில்லியர்ஸ் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் கேப்டன்ஷிப் பதவிக்காக ஏற்பட்ட சண்டைதான் இந்த தோல்விக்கு காரணம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சில வதந்திகள் வந்ததை நானும் அறிவேன். அதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. நெருப்பு இருக்கும்போது புகையும். விரோதமாக இருந்த அணிகளின் ஒரு பகுதியாக நானும் இருந்துள்ளேன். குறிப்பாக சொந்த மண்ணுக்கு வெளியே வெளிநாட்டில் சுமாரான பார்மில் நீங்கள் விளையாடும் காலங்களில் நானும் இருந்துள்ளேன். வெளிநாட்டில் விளையாடும்போது ஒற்றுமையான அணி முக்கியம். சொந்த ஊரில் விளையாடுவது எளிது.

கடந்த சில வாரங்களாக இந்திய அணி தங்களுக்குள்ளேயே நம்பிக்கையை இழந்தார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அப்படி நீங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழக்கும்போது தோல்வியின் பக்கத்தில் இருப்பீர்கள். இந்திய அணியின் நிலை என்ன என்பது பற்றிய உண்மை என்னிடம் இல்லை. எனவே யார் யாருடன் மோதுகிறார்கள் என்பதை நான் பார்க்க காத்திருக்கிறேன்.

2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் நாங்கள் தோற்ற தொடரில் நானும் இருந்தேன் பின்னர். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் தோற்றோம். அந்த சமயங்களில் எங்கள் அணியில் ஒற்றுமை இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டோம். நான் கேப்டனாக இருந்த அணிகளில் இது போன்ற விஷயங்களை நம்பி உள்ளேன். அது தவிர்க்க முடியாதது. ஒரு அணி உண்மையாகவும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் தோல்வியை சந்தித்தால் கூட உங்களுடைய அணி நன்றாக இருக்கும்” என கூறினார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments