Monday, February 17, 2025
Google search engine
Homeஇந்தியா1,100 காளைகள், 910 வீரர்களுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

1,100 காளைகள், 910 வீரர்களுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்று மதுரை பாலமேட்டிலும், நாளை அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன. இதன்படி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று நடந்து முடிந்தன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இதனை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. எனினும், 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்தனர். அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. அவற்றை பிடிக்க வீரர்களும் உற்சாகத்துடன் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாடுவார்கள். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் இடம் பிடிக்கும் காளைக்கு பரிசாக டிராக்டர் மற்றும் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன. டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments