8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். மேலும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக வருவார் என்றும் கணிக்கும் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்.2025: சென்னைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மும்பை கேப்டன் பாண்ட்யா விளையாட தடை.. காரணம் என்ன..?
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக ரோகித் சர்மா இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் மீண்டும் ரன்கள் குவிப்பதை நான் பார்ப்பது நன்றாக இருக்கிறது. ஜோப்ரா ஆர்ச்சர் அதிக விக்கெட்டுகள் எடுக்கக் கூடிய வீரராக வருவதை நான் விரும்புகிறேன்.
அதே போல டிராவிஸ் ஹெட் சிறந்த பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். தொடரில் அபாரமாக விளையாடிய அவர் கடந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்காக அசத்தினார். சமீபத்திய இலங்கை தொடரில் கொஞ்சம் தடுமாறிய அவர் மீண்டும் அசத்துவார். எனவே இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தாலும் அவர் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று நம்புகிறேன்” என கூறினார்.