சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக குனரத்னே 64 ரன்களும், சங்கக்கரா 47 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆஷ்லே நர்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 174 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக டுவைன் சுமித் 49 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் இசுரு உதானா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன