Friday, April 25, 2025
Google search engine
Homeஇந்தியாமாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி இன மக்கள்

மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி இன மக்கள்

மாமல்லபுரத்தில் இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான மாசிமக பவுர்ணமி இன்று காலை தொடங்கியது. இதற்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், இருளர் பழங்குடி இன மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.

மாசிமக பவுர்ணமி அன்று அவர்களுடைய குலதெய்வமான கன்னியம்மன் கடலில் எழுந்து அருள் பாலிப்பதாக நம்புகின்றனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக குடில்கள் அமைத்து தங்கி வரும் மக்கள், இன்று அதிகாலை முதல் கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்.

கடற்கரை மணலால் சிறிய அளவில் கோயிலை உருவாக்கி மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால் அலங்கரித்து வழிபட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சாமி ஆடுவது, திருமணம் நிச்சயிப்பது, திருமணம் நடத்துவது, குறி சொல்லுவது, குறி கேட்பது போன்ற அவர்களது பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments