Tuesday, December 3, 2024
Google search engine
Homeகனேடிய'சீயான் 62' வில் கதையின் நாயகியாகும் துஷாரா விஜயன்

‘சீயான் 62’ வில் கதையின் நாயகியாகும் துஷாரா விஜயன்

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments