அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’ (Fight Club). இந்த படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். ‘பைட் கிளப்'(Fight Club) திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.