லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில உள்ளது.
குறிப்பாக கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ‘தல’ அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் புத்திசாலித்தனமும் எளிமையும் நிறைந்தவர் அஜித் என அவர் பதிவிட்டுள்ளார்.