மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 80 வீதமானோர், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர் என கொழும்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர், வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.