Saturday, July 27, 2024
Google search engine
Homeசினிமா4 வாரங்கள் கடந்தும் தொடர்ந்து வெற்றிநடைப்போடும் அரண்மனை 4

4 வாரங்கள் கடந்தும் தொடர்ந்து வெற்றிநடைப்போடும் அரண்மனை 4

தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்துக் கொண்டு வரும் ஃப்ரான்சிஸ் படமாக அரண்மனை வளர்ந்து வருகிறது, ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டு பாகத்தை இயக்கினார்.

இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர்.சி-க்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.

இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2024 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்த முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் சமீப காலமாக பல மலையாள திரைப்படங்கள் அசால்டாக நூறு கோடியை தட்டி தூக்கி சென்ற நிலையில், அரண்மனை 4 திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும் கோடை விடுமுறை என்பதால் ரசிகர்கள் குடும்பத்துடன் அரண்மனை 4 திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதன்படி தற்போது இந்த படம் 25 நாட்களையும் நெருங்கி உள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். படம் தமிழ் , தெலுங்கு மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தை இந்தியிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் அதற்கான டிரைலரையும் இன்று வெளியிட்டனர்.

ஸ்டார், பிடி சார், ரசவாதி போன்ற படங்களும் கடந்த சில வாரங்களில் வெளியாகி இருந்தாலும், அரண்மனை 4 திரைப்படமும் அதற்கு இணையாக போட்டி போட்டு வசூலளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments