Monday, December 23, 2024
Google search engine
Homeஇந்தியாமருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. வயதான தாயை தூக்கி சென்ற மகள் - வைரல் வீடியோ

மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. வயதான தாயை தூக்கி சென்ற மகள் – வைரல் வீடியோ

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணா. இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அவர்களைக் கண்ட மருத்துவர்கள் மூதாட்டியை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். மூதாட்டியை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியை கேட்டபோது, மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பதில் ஒன்றும் கூறாமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வலியால் துடித்து கொண்டிருந்த மூதாட்டியை, மகள் வளர்மதி தன்னந்தனியாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கிச் சென்றார். மூதாட்டியை பெண் தூக்கி சென்றதை மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைவரும் பார்த்தனர். ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments