மலையக மார்க்க ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (06) பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாகவே மலையகத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.