தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை டாப்சி செல்பி எடுக்க மறுத்து ரசிகர்களின் கோபத்தில் சிக்கி உள்ளார்.
டாப்சி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் ஏறுவதற்காக சென்றபோது போட்டோகிராபர்கள் பின்தொடர்ந்து புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றார்.
ரசிகர் ஒருவர் ஓடோடி சென்று டாப்சியிடம் ஒரே ஒரு செல்பி மேடம் என்று கெஞ்சினார். ஆனால் அவரை தள்ளிப்போங்க என்றபடி பார்வையை அவர் பக்கம் திருப்பாமல் நேராக காரில் ஏறி சென்று விட்டார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகிறது. வீடியோவை பார்த்த பலரும் செல்பிக்கு கெஞ்சினால் கண்டு கொள்ளாமல் போவது ஏன்? ஜெயா பச்சன் மாதிரி நடக்கிறீர்களே? படங்கள் தோல்வி அடைவதால் மன அழுத்தமா? என்றெல்லாம் டாப்சியை காட்டமாக திட்டி ஆத்திரத்தை கொட்டி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.