Friday, October 18, 2024
Google search engine
Homeசினிமாசமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் - பெரியார் விஷன் இன்று தொடக்கம்

சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடி தளம் – பெரியார் விஷன் இன்று தொடக்கம்

திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் “PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களுக்கான OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். “PERIYAR VISION- Everything for everyone” என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.

கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என்று பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், “ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. ‘பராசக்தி’ படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் ‘சேகுவேரா’ படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.

இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறினார்.

கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓடிடி மக்களிடையே பரவி அதற்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஓடிடியில் வெளிவரும் கண்டண்ட்டுகளை பார்க்கும் மக்கள் இந்த ஓடிடி- யில் வரும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும் படங்களை பார்த்து ஆதரிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments