Sunday, April 27, 2025
Google search engine
Homeகனேடியகளவாடப்பட்ட 80 வாகனங்களை பொலிஸார் மீட்டனர்

களவாடப்பட்ட 80 வாகனங்களை பொலிஸார் மீட்டனர்

கனடாவில் களவாடப்பட்டிருந்த எண்பது வாகனங்களை பொலிஸார் அதிரடியாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களின் சந்தைப் பெறுமதி சுமார் 5 மில்லியன் டொலர்கள் என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏழு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலம் களவாடப்பட்ட வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வாகனங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனக் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட பல்வேறு சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சில ஆண்டுகளாக பாரியளவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments