அமெரிக்காவில் நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் உள்ள ரோசெஸ்டர் மேம்ப்பிள்வுட் பூங்காவில் நேற்று இரவு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை பார்த்த மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.