சீனாவின் மத்திய பகுதியில் அமைந்த ஹுனான் மாகாணத்தில் கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், 900 வீடுகளும், 1,345 சாலைகளும் பாதிப்படைந்து உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 5,400 மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வந்தபோதும், சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உலக அளவில், பசுமை வாயுக்களை அதிகம் வெளியிடும் பெரிய நாடாக உள்ள சீனா, பருவநிலை மாற்ற தாக்கத்திற்கு ஆட்பட்டு உள்ளது.
சில பகுதிகள், கடந்த 24 மணிநேரத்தில் 645 மி.மீ. (25 அங்குலம்) மழையை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.