இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே அடித்தது.
இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் இலங்கை அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணி (சூப்பர் ஓவர் உட்பட) என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை (105 தோல்வி) முதல் இடத்திலும், வங்காளதேசம் (104 தோல்வி) 2வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (101 தோல்வி) 3வது இடத்திலும் உள்ளன.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகள் கண்ட அணி (சூப்பர் ஓவர் உட்பட):-
இலங்கை – 105 தோல்வி
வங்காளதேசம் – 104 தோல்வி
வெஸ்ட் இண்டீஸ் – 101 தோல்வி
ஜிம்பாப்வே – 99 தோல்வி
நியூசிலாந்து – 99 தோல்வி