தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அண்மையில் கீர்த்தி சுரேஷ் தனியார் யூட்யூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நடிகர் சிம்பு குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
அந்த பேட்டியில், “சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றினால் நன்றாக இருக்கும். அவருடைய ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். சிம்புவை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் சிலமுறை போனில் பேசியிருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.