இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் தன்னிடம் உள்ளதாகவும், கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாகவும் அவர் கூறினார்.