Friday, March 14, 2025
Google search engine
Homeசினிமாஉடற்பயிற்சி சாதனைகளை வெளியிட்ட உலக நாயகன்

உடற்பயிற்சி சாதனைகளை வெளியிட்ட உலக நாயகன்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் முன்னாள் கதாநாயகன், 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger).

ஆஸ்திரியா (Austria) நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அர்னால்ட், கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது பல திரைப்படங்கள் உலகெங்கும் வசூலை வாரி குவித்தன. இன்றும் அவரை பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தனது 15 வயது முதல் தொழில்முறை பாடிபில்டராக விளங்க விருப்பம் கொண்ட அர்னால்ட், பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து காட்டி இளைஞர்களை ஈர்த்தவர். இன்றளவும் பல நட்சத்திர பாடிபில்டர்களுக்கு கனவு நாயகனாக திகழும் அர்னால்ட், உடற்பயிற்சி குறித்த பல ஆர்வலர்களின் சந்தேகங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறார்.

இந்நிலையில் எடை பயிற்சியில் மிக முக்கியமான 3 பயிற்சிகளாக கருதப்படும் ஸ்க்வாட் (squat), டெட் லிஃப்ட் (dead lift) மற்றும் பெஞ்ச் பிரஸ் (bench press) ஆகியவற்றில் தனது எடை சாதனைகளை குறித்து தெரிவித்தார்.

“பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் எனது அதிகபட்ச எடை 238 கிலோகிராம். எனது சிறப்பான டெட் வெய்ட் 322 கிலோகிராம்களை எட்டியது. எனது அதிகபட்ச ஸ்க்வாட் எடை 276 கிலோகிராம்கள். என்னுடைய காலகட்டத்தில் இவை ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவை வழக்கமாக உலகம் முழுவதும் பலரால் பயிற்சி செய்யக்கூடிய எடையாக மாறி விட்டது. அது ஒரு காலம். ஆனாலும், தினசரி ஜிம்முக்கு செல்வதை நான் நிறுத்தியதில்லை; அதில் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. ஓய்வு எடுக்க தொடங்கினால், துரு பிடித்து விடுவோம்” என ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா (Mr. Olympia) போட்டிகளை வென்றவரான அர்னால்ட் கூறினார்.

தவறாத கட்டுப்பாட்டின் காரணமாக அர்னால்ட் மேற்கொண்ட ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளால் கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டுள்ளதால் இன்றளவும் பாடிபில்டர்களின் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments