Sunday, September 8, 2024
Google search engine
Homeஇலங்கைபா.ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது - காங்கிரஸ் விமர்சனம்

பா.ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது – காங்கிரஸ் விமர்சனம்

மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த 35 அடி உயர சிலை இன்று மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது. கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்தநிலையில், மராட்டியத்தில் 35 அடி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததை சுட்டி காட்டி பா.ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பா.ஜனதா ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மராட்டியத்தின் ராஜ்கோட்டில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments