Friday, March 14, 2025
Google search engine
Homeகனேடியகல்கரியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

கல்கரியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

கனடாவின் கல்கரியின் க்ரோபூட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய கூடாமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தில் சிக்கியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குளிர் காரணமாக அடைக்கலம் பெற்றிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கு இடமானவை அல்ல என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments