பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில்,
பாரிஸ் நகரில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள துளசிமதி , வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள மனிஷா ராமதாஸ் , நித்யா ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். நீங்கள், இன்னும் பல சிகரங்களை எட்டிப் பிடிக்க வாழ்த்துகிறேன். தமிழ்நாடு உங்களால் பெருமிதம் கொள்கிறது.என தெரிவித்துள்ளார்.