ரஷியா – உக்ரைன் இடையே இன்று 921வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, இப்போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதின் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புதின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புதினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் உறுப்பினராக உள்ள நிலையில் புதினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மங்கோலியா சென்ற ரஷிய அதிபர் புதினை அந்நாட்டு அதிபர் உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.