Sunday, March 16, 2025
Google search engine
Homeஇலங்கைசர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தல்

அடுத்த வருடத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்விற்கு முன்னர் இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

கொள்கையளவில் கடன் வழங்குநர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இரண்டாவது மறுஆய்விற்கு முன் உண்மையான ஒப்பந்தங்களாக மாற்றப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கொழும்பிற்கு விஜயம் செய்ய சர்வதேச நாணய நிதியம் திட்டமிடப்பட்டுள்ளதோடு ஜூன் மாதத்திற்குள் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனும் மற்றும் சீனாவின் எஸ்சிம் வங்கியுடனும் கொள்கை ரீதியில் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments