நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல், சங்கர் இயக்கிய ‘பாய்ஸ் ‘படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 -ம் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் நகுல் நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தேதி எதுவும் குறிப்பிடாமல் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.